இலெமோரியா:
இதன் பெயருக்கான விளக்கத்தை இப்போது காணலாம். இலெ+மோரியா
என்று பிரித்து பார்க்க வேண்டும். “இலெ” என்ற வார்த்தை அரபு வார்த்தையாகும்.
இது மிகவும் உயர்வாகக் கருதப்பட்ட யூதராஜாக்களைக் குறிப்பதற்காகப்
பயன்படுத்தப்படும் சொல் ஆகும். பென்யமீன் மற்றும் யூதர்களுக்குப் பிரித்து
கொடுக்கப்பட்ட நிலப்பரப்பு, அதாவது எருசலேம் ஆலயம் உள்ள பகுதி ஆபிரகாம்
காலத்திலே மோரியா தேசம் என்றே அழைக்கப்பட்டது.
பரிசுத்த வேதாகமம் -ஆதியாகமம் 22: தேவன் ஆபிரகாமை சோதிக்க இவ்வாறு
கூறினார், “நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்து கொண்டு,
மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் காட்டும் மலை ஒன்றின்மேல் நீ
அவனைத் தகன பலியாகப் பலியிட வேண்டும்,” என்றார்.
தேவன் கூறிய இடத்தில்தான் பின்னாட்களில் எருசலேம்
ஆலயம் கட்டப்பட்டது. இங்குதான் யூதர்கள் ஆட்சி செய்தனர். எனவேதான்
யூதப்பெண்ணான எஸ்தரின் வம்சத்தைக் குறிக்கும் பொருட்டு அவரது குமாரனை
சந்திரகுப்த மோரியர் என்று அழைத்தனர். அப்பெயரே மௌரியர் என்றானது.
இதிலிருந்து “இலெமோரியா” என்பதைத் தெற்கு யூதேயா என்றும், தமிழில் தென்
குமரி என்றும் அழைத்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.